தமிழ் சினிமாவில் படப்பிடிப்பில் கார் டப்பிங் ஸ்டண்ட் ஆர்டிஸ்டாக இருப்பவர் ராஜு. இவர் நேற்று காலை பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் புதிய திரைப்படத்தில் கார் டப்பிங் ஸ்டண்ட் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ராஜு உயிரிழந்த நிலையில் அவரது மரணம் திரையுலகில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடிகர் விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் “பல வருடங்களாக ராஜுவை எனக்கு தெரியும். என்னுடைய பல படங்களில் அவர் பணியாற்றி இருக்கிறார். அவரின் திடீர் மரணம் மிகவும் துயரத்தை அளிக்கிறது” என்றும், “இது ஒரு பதிவுடன் முடிவடைய கூடாது. அவர் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு தேவையான முழு ஆதரவையும் நான் வழங்குவேன். அது என் கடமை” என்று பதிவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா “எங்கள் கார் ஜம்பிங் ஸ்டான்ட் வல்லுனரான ராஜு ஒரு ஸ்டண்ட் செய்யும்போது உயிரிழந்தார். அவரைப் போல திறமையான ஸ்டண்ட் ஆர்டிஸ்டை இழந்தது எங்கள் தொழிலுக்கும் பெரிய இழப்பு” என்று கூறியுள்ளார். ஆனால் தற்போது வரை நடிகர் ஆர்யா மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் எந்த ஒரு பதிவும் வெளியிடவில்லை என்று பேசப்பட்டு வருகிறது.
மேலும் ஸ்டண்ட் கலைஞர்கள் தங்கள் உயிரை பணயமாக வைத்து பெரும் தியாகங்களை செய்துவரும் நிலையில் இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.