17 எம்.பி.,களுக்கு சன்சத் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு..!
Newstm Tamil July 27, 2025 06:48 AM

சிறப்பாக செயல்பட்டதற்காக 17 எம்.பி.,க்களுக்கு 2025ம் ஆண்டுக்கான 'சன்சத் ரத்னா' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி., சுப்ரியா சுலே, பாஜ எம்.பி., நிஷிகாந்த் துபே, உத்தவ் தாக்ரேவின் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அரவிந்த் சாவந்த் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

அதேபோல, 3 பார்லிமென்ட் கூட்டங்களிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்த நான்கு சிறப்பு நடுவர் விருதுகளும் வழங்கப்படுகின்றன. ஒடிசா பாஜ எம்.பி., பர்த்ருஹரி மகதாப், கேரள எம்.பி., என்.கே. பிரேமச்சந்திரன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே மற்றும் சிவசேனா கட்சி எம்.பி., ஸ்ரீரங் அப்பா சந்து பார்னே ஆகியோருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 16வது (2014-2019) லோக் சபாவிலிருந்து தொடர்ந்து சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.

பிற விருதுகளை பெறும் எம்.பி.,க்கள்

ஸ்மிதா உதய் வாக் (பாஜ)

நரேஷ் மாஸ்கே (சிவசேனா)

வர்ஷா கெயிக்வாட் (காங்கிரஸ்)

மேதா குல்கர்னி (பாஜ)

பிரவீன் படேல் (பாஜ)

பித்யுத் பரண் மகதோ (பாஜ)

திலீப் சைகியா (பாஜ)

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.