பஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்டம் ஜிராஜ்பூரை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள ஒரு அழகு நிலையத்தில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன், வேலை முடித்து சண்டிகர்-சர் அம்பாலா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மாலுக்கு அருகே ஆட்டோவிற்காக காத்திருந்துள்ளார். அந்த நேரத்தில் காரில் வந்த மர்ம நபர்கள், அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக காருக்குள் இழுத்துச் சென்று கடத்தியுள்ளனர்.
கடத்தல் செய்யப்பட்ட சிறுமி, காரிலேயே மர்ம நபர்களால் பாலியல் சித்ரவைக்கு உள்ளாகியுள்ளார். பின்னர், சண்டிகர் பகுதியில் உள்ள ஒரு ஒதுக்குப்பட்ட இடத்துக்கு அழைத்துச் சென்று மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இவ்வாறு துயரமான சூழ்நிலையில் வன்கொடுமை செய்த பின்னர், அவர்களே சிறுமியை கடத்திய இடத்திலேயே விட்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து தனது தாயிடம் கூறிய சிறுமி, உடனடியாக போலீசில் புகார் அளிக்க வைத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுமியை சிசிடிவி காட்சிகள் மற்றும் மருத்துவ சான்றுகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக உள்ளனர். சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.