கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் அரிய வகை உலோகமான இரிடியம் ரூபாய் 400 கோடிக்கு விற்பனை செய்ய முயன்ற சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது நெய்வேலியில் உள்ள ஒரு சிலர் இரிடியம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பெயரில் மாறுவேடத்தில் சென்ற காவல்துறையினர் இரிடியம் விற்பனையாளர்களிடம் வாங்குவது போல பேசியுள்ளனர். அப்போது விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் அவர்களிடம் ரூபாய் 400 கோடிக்கு இரிடியத்தை விற்க முயன்றனர்.
உடனே அதனை வாங்குவது போல 4 பேரையும் காவல்துறையினர் கையும் களவுமாக மடக்கிப் பிடித்தனர். பின் அவர்களிடமிருந்த இரிடியத்தை பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் வைத்திருந்த இரிடியம் உண்மையானது தானா? அல்லது இது ஏமாற்று வேலையா? என காவல்துறையினர் சோதனை ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.