Madhampatti Rangaraj: பிரபல சமையல்காரரும், தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவருமான மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் அறிவிப்பு சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் படம் மூலம் அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். ஆனால் அதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்காமல் தன்னுடைய குடும்ப தொழிலை கையில் எடுத்து டாப் பிரபலங்களின் வீட்டு விஷேசத்துக்கு சமையல் ஆர்டரை எடுத்து கலக்கி வந்தார்.
கடந்த சீசனின் பிரபல செஃப் வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியை விட்டு வெளியேற அவர் இடத்திற்கு மாற்றாக நிகழ்ச்சிக்குள் அடியெடுத்து வைத்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். தற்போதையை சீசனிலும் நடுவராக இருந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் இவருக்கும், பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்டில்லாவுக்கும் காதல் என கிசுகிசுக்கப்பட்டது.
இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அவருடைய முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜ் இதை மறுத்தார். நாங்க இருவரும் ஒன்றாக தான் இருப்பதாக வெளிப்படையாக பேசி இருந்தார்.
ஆனால் மாதம்பட்டி ரங்கராஜ் எது குறித்து பேசாமல் அமைதியாகவே இருந்து வருகிறார். இந்நிலையில் ஜாய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் இருக்கும் படத்தினை வெளியிட்டு மிஸ்டர் அண்ட் மிஸ்ஸர்ஸ் ரங்கராஜ் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
அடுத்த படத்திலேயே நாங்க கர்ப்பமாக இருக்கிறோம். 6 மாதம் கர்ப்பம் என்பதை குறிப்பிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்து அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார். இன்னும் முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜ் பெயரை நீக்காமல் இருக்கிறார்.
இதனால் இருவரும் இன்னும் விவகாரத்து வாங்கவில்லையோ என்ற கேள்வி எழுந்துள்ளது. கர்ப்பத்தின் காரணமாக ரங்கராஜ் இதை ஒப்புக்கொண்டு இருக்கிறாரா எனவும் பேச்சுக்கள் எழுந்துள்ளது. முதல் மனைவி ஸ்ருதி வக்கீல் என்பதால் அடுத்து அவர் என்ன செய்ய போகிறார் என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.