ராட்சசர்களின் ராஜா… ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படம்!
TV9 Tamil News July 27, 2025 11:48 PM

நடிகர் விஜய் தேவரகொண்டா (Actor Vijay Devarakonda) நடிப்பில் தெலுங்கு சினிமாவில் தற்போது பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் கிங்டம். இந்தப் படத்தை பிரபல இயக்குநர் கௌதம் தின்னனுரி எழுதி இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான மல்லி ராவா, லாட்ஸ் ஆஃப் லவ் மற்றும் ஜெர்சி ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நடிகர் நானி நடிப்பில் இயக்குநர் கௌதம் தின்னுரி (Gowtham Tinnanuri) இயக்கத்தில் வெளியான ஜெர்சி படம் பான் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் தற்போது விஜய் தேவரகொண்டாவை வைத்து மிகவும் வித்யாசமான கதைக் களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லரை நேற்று 26-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு படக்குழு வெளியிட்டது.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது யூடியூபில் 4 மில்லியன் பார்வைகளை கடந்து ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர்கள் நாக வம்சி எஸ் மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் 4 சினிமாஸ் பேனரின் கீழ் தயாரித்து உள்ளனர்.

Also Read… நடிப்பிற்காக எவ்வளவு கடுமையாக உழைக்கவும் நான் தயார் – டிஎன்ஏ பட நடிகை நிமிஷா சஜயன்

விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட ட்ரெய்லர் கூறுவது என்ன?

அதன்படி கிங்டம் படத்தின் ட்ரெய்லர் தெலுங்கு மொழியில் மட்டும் இன்றி தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாகியுள்ளது. ட்ரெய்லரில் பார்க்கும் போது காவல் துறையில் கடைநிலை ஊழியராக இருக்கும் விஜய் தேவரகொண்டா தனது உயர் அதிகாரியின் உத்தரவின் பேரில் அண்டர் கவர் ஸ்பையாக செல்ல உத்தரவிடுகிறார்.

குடும்பம் மற்றும் வேலை அனைத்தையும் மறந்து ஒரு பெரிய கேங்ஸ்டர்களுக்கு நடுவே செல்ல அதிகாரி விஜய் தேவரகொண்டவிற்கு உத்தரவிடுகிறார். அதனைத் தொடர்ந்து தனது அடையாளத்தை மறைத்து அந்த கேங்ஸ்டர் கும்பலுக்குள் நுழைவதற்காக குற்றவாளியாக ஜெயிலுக்கு செல்கிறார் விஜய் தேவரகொண்டா.

Also Read… ஜேசன் சஞ்சய் இன்ஸ்டாவில் ஃபாலோ பண்ணும் ஒரே ஒரு தமிழ் நடிகர்… ஆனால் அது விஜய் இல்லை!

அந்த ஜெயிலில் இருக்கும் பெரிய கேங்ஸ்டர் தனது அண்ணன் தான் என்பதை தெரிந்துகொள்கிறார். அதன்பிறகு இவர் அரசுக்கு எதிராகவும் தனது அண்ணனுக்கு ஆதரவாகவும் செயல்படுவதுபோது அந்த ட்ரெய்லரில் காட்டப்படுகின்றது. இதற்கு எதோ ஃப்ளாஸ்பேக் இருப்பது ட்ரெய்லரில் தெரிந்தாலும் அதன் முழு விவரம் படத்தைப் பார்க்கும் போதுதான் விளக்கமாக புரியும்.

முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம் வருகின்ற ஜூலை மாதம் 31-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கிங்டம் படத்தின் ட்ரெய்லர் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

In the #Kingdom of fire and fury, a new ruler will rise 🔥

▶️ https://t.co/yBzWSVacSH#KingdomTrailer is out now.

It’s a tale forged in rage, driven by emotion and a story where one man fight for his destiny ❤️‍🔥

In Cinemas #KingdomOnJuly31st 💥💥@TheDeverakonda… pic.twitter.com/BTnxi4hA58

— Sithara Entertainments (@SitharaEnts)

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.