தமிழகத்தில் ராஜராஜன், ராஜேந்திரனுக்கு சிலைகள்: பிரதமர் மோடி அறிவிப்பு!
WEBDUNIA TAMIL July 28, 2025 02:48 AM

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மாமன்னர்கள் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகியோருக்கு தமிழகத்தில் சிலைகள் நிறுவப்படும் என்று அறிவித்தார்.

விழாவில் பேசிய பிரதமர், சோழப் பேரரசின் புகழ், ஜனநாயகம், நீர் மேலாண்மை, சைவப் பக்தி, மற்றும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பு ஆகியவற்றை எடுத்துரைத்தார்.

மேலும், ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தையும் வெளியிட்டார். களவாடப்பட்ட 36 தமிழக கலை சின்னங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் ராஜராஜன், ராஜேந்திரன் இருவரும் சக்தி வாய்ந்த கடற்படையை வளர்த்தெடுத்ததாகவும், ராஜேந்திரன் அந்த கடற்படையை விஸ்தரித்ததாகவும் கூறினார்.

'ஆபரேஷன் சிந்தூர்' பாரதத்தின் வலிமையை வெளிப்படுத்தியது என்றும், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பதிலடி எப்படி இருக்கும் என்பதற்கு அது ஒரு உதாரணம் என்றும் தெரிவித்தார். புதிய இந்தியாவுக்கு சோழ சாம்ராஜ்ஜியம் ஒரு வரைபடத்தை தருவதாகவும் குறிப்பிட்டார்.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.