“எஸ்.டி. பிரிவில் 83% நிரப்பப்படவில்லை.!” நாடு முழுவதும் பேராசிரியர் நியமனங்களில் பாரபட்சம்..
Top Tamil News July 28, 2025 03:48 AM

நாடு முழுவதும் உள்ள ஒன்றிய அரசு பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதில் பாரபட்சம் காட்டப்படுபதும் அம்பலமாகியுள்ளது.  

மத்திய பல்கலையில் பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணியிடம் வாரியாக நிரப்பட்டுள்ள விவரங்கள் குறித்து  நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சகம் பதில் அளித்துள்ளது .  அதில் ஓ.பி.சி பிரிவு 80 % இடங்களில் நிரப்பப்படாமல் இருப்பது அம்பலமாகியுள்ளது. இதேபோல் எஸ்.சி. பேராசிரியர் பணியிடங்கள் 64 சதவீதமும்,  எஸ்.டி. பேராசிரியர் இடங்களில் 83 சதவீதமும் நிரப்பப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. மத்திய பல்கலையில்  நிரப்பப்பட்ட  மொத்தம் 14,062 பேராசிரியர் பணியிடங்களில் 9,254 பொது பிரிவினர்கள் மட்டுமே  நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஓ.பி.சி பிரிவுக்கு 3,688 பணியிடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் 2,197 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 

* பேராசிரியர் பணியிடங்களில் 1,538 இடங்கள் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில் 935 இடங்களில் மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
*பழங்குடியினருக்கான 1,155 கல்லூரி ஆசிரியர் பணியிடங்களில் 727 மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. இதேபோல் எஸ்.டி. பிரிவினருக்கான 2,310  இடங்களில் 1,599 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 
* ஓ பி சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 423 பேராசிரியர் பணியிடங்களில் 84 மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 
*மேலும் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட 38 பேராசிரியர் பணியிடங்களில் 11 மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது.  
* எஸ்.டி.க்கு ஒதுக்கப்பட்ட 104 பேராசிரியர் இடங்களில் 24 மட்டுமே பழங்குடியினராக நிரப்பப்பட்டு உள்ளது. 


*இனை பேராசிரியர் பணியிடங்களில் ஓ.பி.சிக்கு ஒதுக்கப்பட்ட 883 பணியிடங்களில்  275 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன
* 68 இணைப பேராசிரியர் பணியிடங்களில் ஓபிசி பிரிவினர் ஒருவர் கூட நியமனம் செய்யப்படவில்லை.
* எஸ்.டி. பிரிவினருக்கான 632 இணை பேராசிரியர் இடங்களில் 38 இடங்கள் மட்டுமே , பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது. *எஸ். டி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 37 இணை பேராசிரியர் பணியிடங்களில் 108 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன . சுமார் 83 சதவிகித எஸ்.டி. பேராசிரியர் இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. 

*உதவி பேராசிரியர் பணிகளில் ஓபிசி க்கு ஒதுக்கப்பட்ட 2,382 இடங்களில் 1,838 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 
*எஸ்.டிக்கு  ஒதுக்கப்பட்ட 1,370 உதவி பேராசிரியர் பணியிடங்களில் 1,180 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
* எஸ்.டிக்கு ஒதுக்கப்பட்ட 704 உதவி பேராசிரியர் பணியிடங்களில் 595 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. இதன்மூலம்  மத்திய பல்கலையில் ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி.க்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது


 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.