இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் கூலி. வரும் ஆகஸ்டு 14ல் ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், அமீர்கான், நாகர்ஜூன், சௌபின் சாகிர், உப்பண்ணா மற்றும் சுருதிஹாசன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
படத்தில் அனிருத் இசை அமைத்துள்ளார். 3 பாடல்களுக்கான புரோமோ லிரிக்ஸ் உடன் வெளியாகி விட்டன. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. கூலி படத்திற்காக கமல் வாய்ஸ் ஓவர் கொடுப்பார் என்றும் சொல்லப்படுகிறது.
அந்த வகையில் கூலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் ஆகஸ்டு 2ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கமல்ஹாசன் கலந்து கொள்வாரா என ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
கூலி படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு அறவே இல்லை என்பதுதான். என்ன இப்படி படக்குன்னு சொல்லிட்டாரே என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா. ரஜினியும், கமலும் நண்பர்கள் தான். ஆனாலும் கமலின் அரசியல் சூழல் வேறு. ரஜினி அரசியலில் இறங்காதவர். கமல் எம்.பி. பதவியில் இருக்கிறார்.
அதற்கான பொறுப்புகளும் அவருக்கு இருக்கும். அதுதவிர மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். அதற்கான வேலைகளும் இருக்கும். அது தவிர அவரது பட வேலைகளும் இருக்கும். இப்படி அவருக்கு என்று நிறைய கமிட்மெண்டுகள் இருக்கும். அதே நேரம் நண்பனுக்காக வரவும் செய்யலாம். ஏனென்றால் ரஜினி அவரது ஆரம்பகாலத்தில் இருந்தே கூட பயணித்தவர்.
இருவரும் சினிமாவில் தான் ஆரோக்கியமான போட்டி. ஆனால் நிஜத்தில் நெருங்கிய நண்பர்கள். ஒருவருக்கொருவர் கருத்துகளைப் பரிமாறுவர். ஆலோசனைகளையும் கேட்கத் தயங்க மாட்டார்கள். சமீபத்தில் கூட எம்.பி. பதவியை ஏற்கும் முன் ரஜினியைப் பார்த்து விட்டு வந்தார் கமல். அதே போல இந்தியன் 3 பட பிரச்சனைக்கு ரஜினி ஷங்கரிடம் போய் பேசி சுமூகத் தீர்வை எட்ட வைத்ததாகவும் அதனால் இந்த ஆண்டே இந்தியன் 3 படம் வெளிவருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் சொல்கின்றனர்.