தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என ஒரு மர்ம நபர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மிரட்டலை தொடர்ந்து, நடிகர் விஜய்யின் வீட்டிற்கு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் விரைந்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் அவரது வீடு முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில், வெடிகுண்டு உட்பட எந்தவித ஆபத்தான பொருளும் கைப்பற்றப்படவில்லை என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
இருப்பினும், காவல்துறை கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக வெளியான இந்த செய்தி, அக் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
Edited by Siva