தாய்லாந்து – கம்போடியா மோதல்... இந்தியர்களுக்கு அவசர உதவி எண்கள் அறிவிப்பு!
Dinamaalai July 28, 2025 12:48 AM

தாய்லாந்து – கம்போடியா இடையே  எல்லைப் பிரச்சினை மோதல் வெடித்துள்ள நிலையில், இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் வலுவடைந்து போராக மாறி உள்ளது. இந்நிலையில், இந்தியர்களுக்கு அவசர உதவி எண்களை அறிவித்து, இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது

இருநாடுகளின் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டு வரும்  நிலையில் பதற்றம் இன்னும் தணியவில்லை. சர்ச்சைக்குரிய எல்லை பகுதியில் 2 வது நாளாக மோதல்கள் தொடர்ந்துள்ளன. இதனால், தாய்லாந்து நாட்டின் எல்லையோர பகுதிகளில் அவசரநிலையை பிரகடனப்படுத்தி அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  

கம்போடியா ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்த 6F-16 வகை போர் விமானங்களை தாய்லாந்து களமிறக்கியுள்ளது. இந்த மோதலில் 15 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளோம் என 2  நாட்டு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், இந்த மோதல்கள் காரணமாக, உபோன் ரட்சதானி, சூரின், சிகாகெட், புரிராம், சகேயோ, சந்தபுரி, புராட்  மாகாணங்களில் உள்ள 20 இடங்களுக்கு, இந்தியர்கள் பயணம் செய்ய வேண்டாம் என தாய்லாந்தில் உள்ள இந்திய துாதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது . இந்தியர்களுக்காக 085592881676 என்ற அவசர உதவி எண்ணை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அவசர உதவிக்கு phnompenh@mea.gov.in என்ற மின்னஞ்சலில் தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.