திருநெல்வேலி மாவட்டம் கேடிசி நகர் பகுதியில் இன்று காலை நடந்த ஒரு பயங்கர சம்பவம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது வாலிபர் ஒருவர் அந்த பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கவின்குமார் என்பதும் அவரது வயது 28 என்பதும் தெரிய வந்தது. இவர் சென்னையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரது மகன் ஆவார். இந்நிலையில் கவின்குமார் ஒரு பெண்ணை காதலித்து வந்ததும் அந்த விவகாரத்தில் தான் அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.