ஈரோடு மாவட்டத்தில் உள்ள நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் நாகேந்திரன் (55)-சுஜிதா (45) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 20 வயதில் தானிய லட்சுமி என்ற மகள் இருந்துள்ளார். இவர்கள் மூவரும் தற்போது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது நாகேந்திரன் கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சுஜிதா தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர்களது மகளுக்கு மனநல பாதிப்பு இருந்தது. இவர்கள் மூவரும் உடல் நலக்குறைவினால் அவதிப்பட்டு வந்த நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டனர்.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மூவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவர்கள் எழுதிய ஒரு கடிதம் சிக்கியது.
அந்த கடிதத்தில் வீட்டில் 25,000 ரூபாய் பணம் இருப்பதாகவும் அதனை தங்களுடைய இறுதி சடங்குக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் நாகேந்திரன் எழுதி இரந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.