சென்னை மாவட்டத்தில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் எம்.பி திருச்சி சிவா காமராஜர் குறித்து பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த கருத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியிலிருந்து பல கண்டனங்கள் குவிந்து வருகின்றது.
மேலும் பலரும் தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இது குறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது இணையதள பக்கத்தில் “திமுகவின் கட்டுக்கதைகளால் தான் காமராஜர் வீழ்ந்தார். ஒரு முதலமைச்சராக அரசினர் விடுதியில் தங்கி இருக்கும் போது வெப்பம் அதிகமானதால் மரத்தடியில் கட்டிலை போட்டு உறங்கியவர்.
தனக்கு காவலாக நின்றவர்களை கூட உறங்க சொல்லிவிட்டு தனியாக படுத்து உறங்கப் பழகிக் கொண்ட எளிமையானவர் காமராஜர்” என பதிவு செய்திருந்தார்.
மேலும் திருச்சி சிவா “கலைஞரின் கைகளில் தான் காமராஜர் உடல் பிரிந்தது” என கூறியதற்கு பலரும் “பைரவா அந்த விளக்கை அணை” என்று உதவியாளரிடம் கூறிவிட்டு படுக்க சென்ற காமராஜரின் உயிர் பிரிந்தது என்ற வரியை சமூக ஊடகங்கள் முழுவதும் பரப்பி வந்தனர்.
இன்னும் சிலர் 1980களில் தான் ஏசி வந்தது அதற்கு முன்பு ஏசி வந்ததாக எந்த ஒரு வரலாற்று ஆவணங்களும் இல்லை என்பதை பதிவிட்டு வந்தனர். இந்த சூழலில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது இணையதள பக்கத்தில் “கலகமூட்டி குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்” என காமராஜர் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவு பின்வருமாறு,