இதயத்தின் நண்பன் என்று எந்த பழத்தை சொல்வார்கள் தெரியுமா ?
Top Tamil News July 27, 2025 01:48 PM

பொதுவாக  பழ வகைகளில் சீத்தா பழத்திற்கென்று சில மருத்துவ குணமுண்டு ,அந்த சீத்தா பழத்தின் நன்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம் 

1.சீதா பழம்  இதய வால்வுகளில் உள்ள கொழுப்புகளை கரைக்கும் ஆற்றல் கொண்டது .இது  இதய நோய் இரத்த அழுத்தம் போன்ற கடுமையான நோய்கள்  உங்கள் உடலில் வராமல் தடுக்கிறது.
2.சிலரின் உடலில் நரம்புகள் வலுவிழந்து காணப்படுபவார்கள். அவர்கள் சீத்தாப்பழத்தை சாறு எடுத்து அதனுடன் திராட்சை பழ சாற்றை கலந்து பருகி வர நரம்புகள் வலுப்பெற்று ஆரோக்கியம் மேம்படும் 
3.அதுமட்டுமல்லாமல் சிலருக்கு அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்படும் .அவர்கள் சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர தசைகள் சீராக இயங்கி தசைப்பிடிப்பு மாயமாய் மறைந்து விடும் .
4.பொதுவாக சீத்தாப்பழத்தை வெந்நீரில் ஊறவைத்து சாப்பிடுவது நல்லது  
5.ஏனெனில் சீத்தாப்பழம் நம்முடைய உடலுக்கு அதிக குளிர்ச்சியை தந்து சிலநேரம் சளி தொல்லை உண்டாக்கலாம்  
6.அதனால் இரவு நேரங்களை இந்த பழத்தை சாப்பிடும் பொழுது வெதுவெதுப்பான வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைத்து சாப்பிடுவது நல்லது 
7.இப்படி சூடு நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் அதன் குளிர்ச்சி உடலை அவ்வளவாக பாதிக்காது
8.இதயத்தின் நண்பன் என சீதா பழத்தை சொல்வார்கள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.