பள்ளி மாணவி ஆட்டோவில் கடத்தல்... துணிச்சலுடன் செயல்பட்டு தப்பித்து நிமிடங்கள்!
Dinamaalai July 26, 2025 08:48 PM

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் சமீபகாலங்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தானே மாவட்டத்தில் ஆட்டோவில் மாணவியைக் கடத்திச் சென்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டியில் 16 வயது பள்ளி மாணவி, பள்ளிக்கு செல்வதற்காக ஆட்டோ ஒன்றில் ஏறி சென்றுள்ளார். அப்போது அந்த ஆட்டோவில் ஏற்கனவே ஒருவர் இருந்ததாகத் தெரிகிறது. பள்ளி அருகே வந்ததும், ஆட்டோவை நிறுத்துமாறு ஆட்டோ ஓட்டுநரிடம் மாணவி கூறிய நிலையில், ஆட்டோவை நிறுத்தாமல் ஆட்டோ ஓட்டுநர் வேகமாக ஓட்டிச்சென்றார்.

ஆட்டோவில் இருந்து இறங்க முற்பட்டும், அருகில் இருந்த நபர் மாணவியை இறங்க விடாமல் தொடர்ந்து இழுத்துப் பிடித்துள்ளார். ஓட்டுநர் தொடர்ந்து ஆட்டோவை ஓட்டிச் சென்றதைக் கண்டு மாணவி அதிர்ச்சி அடைந்தார்.

தான் கடத்தப்படுவதை அறிந்த மாணவி, நிலைமையை உணர்ந்து துணிச்சலுடன் செயல்பட்டார். அதாவது, தன்னிடம் இருந்த காம்பஸை எடுத்து ஆட்டோ ஓட்டுநரை தாக்கியதுடன், அருகில் இருந்த நபரையும் தாக்கி விட்டு ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்தார். பின்னர் அந்த இடத்தை விட்டு தப்பித்து பள்ளிக்கு வந்து சேர்ந்தார்.

இந்த சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.