அதிமுகவில் இணைந்த ராமநாதபுரம் இளைய மன்னர் ராஜா நாகேந்திர சேதுபதி.. ஈபிஎஸ் வரவேற்பு
WEBDUNIA TAMIL July 29, 2025 06:48 PM

இராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னர் ராஜா நாகேந்திர சேதுபதி, நேற்று தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் இந்த இணைப்பு நிகழ்வு நடைபெற்றது. நாகேந்திர சேதுபதியை எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியுடன் வரவேற்று, அதிமுக உறுப்பினர் அட்டையை வழங்கினார். இது இராமநாதபுரம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த ஜூன் மாதம், இதே இராமநாதபுரம் மன்னர் குடும்பத்தை சேர்ந்த மற்றொரு இளைய மன்னர் ஆதித்யா சேதுபதி பாஜகவில் அக்கட்சியின் தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் முன் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு வாரிசுகள் வெவ்வேறு கட்சிகளில் இணைந்துள்ளனர் என்றாலும் ஒரே கூட்டணியில் தான் இருவரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.