சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தை சேர்ந்த பட்டியலின இளைஞர் கவின். இவர் நெல்லையை சேர்ந்த உதவி ஆய்வாளர் தம்பதியான சரவணகுமார் - கிருஷ்ணவேணியின் மகளை காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கவின் மீது பெண்வீட்டார் கோபத்தில் இருந்துள்ளனர்.
இதனிடையே தந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக கே.டி.சி. நகர் மருத்துவமனைக்கு சென்ற கவினை, அவரது காதலியின் சகோதரன் சந்தித்துப் பேசியுள்ளார். அதன்பிறகு அடையாளம் தெரியாத நபர்களால் கவின் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். காதலித்து வந்த பெண்ணின் சகோதரன் சுர்ஜித் காவல் நிலையத்திற்கு சென்று தானாக சரணடைந்தார். தனது சகோதரியை காதலிக்கும்படி டார்ச்சர் செய்து வந்ததால் கவினை கொலை செய்ததாக சுர்ஜித் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து சுர்ஜித் மீது கொலை, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் காவல் உதவி ஆணையாளர் சுரேஷ் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பெண்ணின் பெற்றோர்களான உதவி ஆய்வாளர் தம்பதியின் தூண்டுதலின் பேரில் தங்களது மகன் கொலை செய்யப்பட்டதாக கவினின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உதவி ஆய்வாளர்கள் தம்பதி மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதில் சுர்ஜித்தின் பெற்றோர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணவேனி தம்பதி இருவருமே உதவி ஆய்வாளர்கள். இவர்களின் தூண்டுதல் பேரிலேயே சுர்ஜித் - கவினை கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து எஸ்.ஐ., தம்பதிகள் மற்றும் சுர்ஜித் மீது கொலை உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 2வது நாளாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆணவக் கொலை வழக்கில் தொடர்புடைய உதவி ஆய்வாளர்கள் தம்பதியினரை டிஐஜி விஜயலட்சுமி பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?