பஞ்சாங்கம் ஆக.01 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
Dhinasari Tamil August 01, 2025 07:48 AM

பஞ்சாங்கம் ஆக.01 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்! Dhinasari Tamil %name%

astrology panchangam rasipalan dhinasari 3 இன்றைய பஞ்சாங்கம் ஆக.01 – வெள்ளி

தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்

||श्री:||
!!श्रीरामजयम!!

!!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!

श्री: श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

ஆடி~ * 16 (1.8.2025) வெள்ளி* கிழமை.*
வருடம் ~ விச்வாவஸு {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}.
அயனம்~ தக்ஷிணாயனம்
ருது ~ க்ரீஷ்ம ருது.
மாதம்~ * ஆடி மாஸம் { கடக மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ அஷ்டமி
நாள் ~ {ப்ருஹு வாஸரம்) வெள்ளி கிழமை.
நட்சத்திரம் ~ ஸ்வாதி
யோகம் ~ ஸாத்தம்
கரணம் ~ பத்ரம்
அமிர்தாதியோகம் ~
சுபயோகம்
நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
எமகண்டம்~ மாலை 3.00 ~ 4.30.
குளிகை ~ காலை 7.30 ~ 9.00.
சூரிய உதயம் ~ காலை 6.05
சந்திராஷ்டமம் ~ மீனம்
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம்
ஸ்ரார்த்த திதி ~ அஷ்டமி
இன்று ~

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः |
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ||
   !!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
   !!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்..

வெள்ளிக்கிழமை ஹோரை

காலை
6-7. சுக்கிரன். சுபம்
7-8. புதன். சுபம்
8-9. சந்திரன். சுபம்
9-10. சனி.. அசுபம்
10-11. குரு. சுபம்
11-12. செவ்வா. அசுபம்

பிற்பகல்
12-1. சூரியன். அசுபம்
1-2. சுக்கிரன். சுபம்
2-3. புதன். சுபம்

மாலை
3-4. சந்திரன் சுபம்
4-5. சனி.. அசுபம்
5-6. குரு. சுபம்
6-7. செவ்வா. அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய ராசிபலன்கள் – 01.8.2025

மேஷம்

மேஷ ராசிக்கான பலன்கள் ..!

தம்பதிகளுக்குள் இருந்த வேறுபாடுகள் விலகும். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சேமிப்பு பற்றிய சில ஆலோசனைகள் கிடைக்கும். வியாபார போட்டிகள் படிப்படியாக குறையும். உறவினர்களின் வருகை ஏற்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் மதிப்புகள் உயரும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா

அஸ்வினி : வேறுபாடுகள் விலகும்.
பரணி : ஆலோசனைகள் கிடைக்கும்.
கிருத்திகை : மதிப்புகள் உயரும்.

ரிஷபம்
V
ரிஷப ராசிக்கான பலன்கள் ..!

வியாபாரத்தில் வேலையாட்கள் மூலம் மாற்றங்களை உருவாக்குவீர்கள். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கடன் சார்ந்த சில உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் வழியில் புரிதல்கள் உண்டாகும். சுப காரிய தொடர்பான பயணங்கள் ஈடேறும். உத்தியோக பணிகளில் திறமைகள் வெளிப்படும். பகை விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்

கிருத்திகை : முடிவுகள் கிடைக்கும்.
ரோகிணி : புரிதல்கள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும்.

மிதுனம்

மிதுன ராசிக்கான பலன்கள் ..!

குடும்பத்தாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் இருந்த வேறுபாடுகள் விலகும். உடன் இருப்பவர்களின் சுயரூபங்களை அறிவீர்கள். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். பழைய வேலையாட்கள் மாற்றுவது குறித்த எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படவும். உதவிகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : வேறுபாடுகள் விலகும்.
திருவாதிரை : ஆர்வம் ஏற்படும்.
புனர்பூசம் : பொறுமையுடன் செயல்படவும்.

கடகம்

கடக ராசிக்கான பலன்கள் ..!

கல்வி பணிகளில் ஆர்வம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் சாதகமான சூழல் அமையும். மனதில் நேர்மறை சிந்தனைகள் உண்டாகும். அலுவலகப் பணிகளில் அமைதி உண்டாகும். அரசு காரியத்தில் அனுசரித்து செல்லவும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். சினம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

புனர்பூசம் : ஆர்வம் உண்டாகும்.
பூசம் : அமைதியான நாள்.
ஆயில்யம் : மேன்மை ஏற்படும்.

சிம்மம்

சிம்ம ராசிக்கான பலன்கள் ..!

மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். பிற இன மக்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குழந்தைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். நண்பர்கள் வழியில் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். வியாபாரத்தில் இழுபறியான வரவுகள் கிடைக்கும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

மகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூரம் : வேறுபாடுகள் விலகும்.
உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.

கன்னி

கன்னி ராசிக்கான பலன்கள் ..!

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் உண்டாகும். பொன் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் தடைபட்ட வரவுகள் வசூலாகும். நண்பர்களிடம் இருந்த மனக்கசப்புகள் குறையும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
அஸ்தம் : ஆரோக்கியம் மேம்படும்.
சித்திரை : மனக்கசப்புகள் குறையும்.

துலாம்

துலாம் ராசிக்கான பலன்கள் ..!

கடன் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறைகளில் மறைமுக விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். இறை காரியத்தில் ஈடுபாடுகள் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில புரிதல்கள் ஏற்படும். எதிர்பாராத சில பொறுப்புகளால் மதிப்புகள் உண்டாகும். எதிர்ப்பு விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

சித்திரை : எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்.
சுவாதி : புரிதல் உண்டாகும்.
விசாகம் : மதிப்புகள் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!

புதுவித பயணங்கள் மூலம் மனதில் தெளிவுகள் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். இரவு நேர பணிகளில் கவனத்துடன் இருக்கவும். புரியாத சில கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் விலகும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை

விசாகம் : தெளிவுகள் ஏற்படும்.
அனுஷம் : புரிதல்கள் ஏற்படும்.
கேட்டை : கட்டுப்பாடுகள் விலகும்.

தனுசு

தனுசு ராசிக்கான பலன்கள் ..!

புதுவித பயணங்கள் மூலம் மனதில் தெளிவுகள் ஏற்படும். குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். அயல்நாட்டு தொடர்பான பொருட்கள் மீது ஆர்வமும் ஈடுபாடும் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். எந்த ஒரு செயலிலும் திருப்தி இன்மை ஏற்படும். மற்றவர்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். அன்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மூலம் : தெளிவுகள் ஏற்படும்.
பூராடம் : ஈடுபாடும் அதிகரிக்கும்.
உத்திராடம் : மதிப்பளித்து செயல்படவும்.

மகரம்

மகர ராசிக்கான பலன்கள் ..!

பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். உயர்கல்வியில் தெளிவான முடிவுகள் பிறக்கும். தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். அலுவல் பணிகளில் பொறுப்புக்கள் உயரும். சமூக தொடர்பான புதிய கண்ணோட்டங்கள் உருவாகும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். மறதி விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.
திருவோணம் : பொறுப்புக்கள் உயரும்.
அவிட்டம் : தொடர்புகள் விரிவடையும்.

கும்பம்

கும்ப ராசிக்கான பலன்கள் ..!

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். தடைபட்டு போன சில காரியங்கள் முடியும். உறவுகள் மத்தியில் அனுசரித்து செல்லவும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். உழைப்புக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பணி வாய்ப்புகள் சாதகமாகும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

அவிட்டம் : குழப்பங்கள் விலகும்.
சதயம் : விரயங்கள் ஏற்படும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் சாதகமாகும்.

மீனம்

மீன ராசிக்கான பலன்கள் ..!

மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறுவதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழில் நிமித்தமான அலைச்சல்கள் மேம்படும். மாணவர்களுக்கு புதுவிதமான சூழல்கள் ஏற்படும். சமூக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உடற்பயிற்சி செயல்களில் விவேகம் வேண்டும். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : புதுமையான நாள்.
ரேவதி : மாற்றம் ஏற்படும்.

தினம் ஒரு திருக்குறள்

அத்காரம் – 1 – கடவுள் வாழ்த்து : குறள் 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).

மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.

தினம் ஒரு திருமுறை

மறை – 2 பதிகம் – 61 பாடல் – 11

விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம் ஆள்வாரே.

விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.

இன்றைய சிந்தனைக்கு…

பெருந்தன்மை என்பது, உன்னால் முடிந்ததை விட, அதிகமாக கொடுப்பது, பெருமை என்பது, உனக்கு தேவையானதை விட, குறைவாக எடுத்து கொள்வது! நீ அன்புடன் செய்யும், சின்ன செயல் கூட, ஒருவரின் வாழ்க்கையில், பெரும் மாற்றத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிடும், உலகில் அன்பை விட, வலிமையானது எதுவுமில்லை!!
உறவுகளில், யார் முக்கியம் என்பதை, உயிர் அற்ற பணமே, முடிவு செய்கிறது; பணம் கொடுத்து பார், உறவுகள் உன்னை போற்றும், அதை திரும்ப கேட்டுப் பார், மண்ணை வாரி தூற்றும்!!!

பஞ்சாங்கம் ஆக.01 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்! News First Appeared in Dhinasari Tamil

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.