71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறந்த இயக்குநர் விருதை ‘தி கேரளா ஸ்டோரி’ பட இயக்குநர் சுதீப்தோ சென் வென்றதை கேரள முதல்வர் பினராயி விஜயன் கடுமையாக கண்டித்துள்ளார்.
தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியான போதே, முஸ்லிம் பெண்கள் இஸ்லாமிய மாநிலங்களில் சேர்க்கப்படுகின்றனர் என்ற வகுப்புவாத கருத்து பரப்புவதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன.பல மாநிலங்களில் எதிர்ப்பும், ஆதரவும் இருந்தது.
இந்தநிலையில் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்வில் சிறந்த இயக்குநர் விருதை ‘தி கேரளா ஸ்டோரி’ பட இயக்குநர் சுதீப்தோ சென் வென்றார் ,சிறந்த திரைப்படமாக '12த் ஃபெயில்' மற்றும் சிறந்த தமிழ் திரைப்படமாக 'பார்க்கிங்' தேர்வு செய்யப்பட்டது.
சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது, 'தி கேரளா ஸ்டோரி' படத்தை இயக்கிய சுதீப்தோ சென்னுக்கு அறிவிக்கப்பட்டதுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடுமையாக கண்டித்துள்ளார்.
இந்நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,"மத வெறுப்பையும் பிளவையும் விதைக்கும் ஒரு திரைப்படத்திற்கு விருது வழங்கியதன் மூலம்,
தேசிய விருதுகள் நடுவர் குழு, சங்க பரிவாரத்தின் பிரிவினை நோக்கங்களை சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளது,"என முதல்வர் தனது X (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"இந்த முடிவு, கேரளாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறது.மலையாளிகள் மட்டுமல்ல, ஜனநாயகத்தை மதிக்கும் ஒவ்வொருவரும் இதற்கெதிராக குரல் கொடுக்க வேண்டும்," எனவும் அவர் வலியுறுத்தினார்.