கல்லூரிகளில் இனி 12 மணி நேரம் வகுப்புகள்: பேராசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி..!
WEBDUNIA TAMIL August 02, 2025 04:48 PM

புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ், ஆகஸ்ட் 1 முதல் நான்காவது ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு கல்லூரிகள் தினமும் 12 மணி நேரம் செயல்பட வேண்டும் என்ற வழிகாட்டுதல், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வகுப்புகள் நடைபெறும் என்ற இந்த அறிவிப்புக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

மாணவர்கள் எப்படி தொடர்ந்து 12 மணி நேரம் வகுப்பறைகளில் உட்கார முடியும், பேராசிரியர்கள் எப்படி அத்தனை நேரம் பாடம் நடத்த முடியும் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இது உடல் மற்றும் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

அதிகரித்து வரும் பாட சுமைகள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை ஈடுகட்ட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், இது நடைமுறைக்கு ஒவ்வாதது என கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த 12 மணி நேர வகுப்புகள் நான்காம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டாலும், ஒட்டுமொத்த கல்விக் கட்டமைப்பையும் இது பாதிக்கும் என்று பரவலாக கூறப்படுகிறது. இந்த வழிகாட்டுதல் குறித்து பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தங்கள் நிலைப்பாட்டை இன்னும் முழுமையாக அறிவிக்கவில்லை. இந்த விவகாரம் கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே ஒரு பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.