திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே, தனது மனைவியிடம் டியூஷன் படிக்க வந்த 9 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மதபோதகரை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள பம்மதுகுளம் பகுதியை சேர்ந்தவர் விக்டர் என்கிற காமராஜ் (54). ஐசிஎப் ஊழியரான இவர், தனது வீட்டின் ஒரு பகுதியில் கிறிஸ்தவ சபை நடத்தி வந்த நிலையில் மதபோதகராகவும் இருந்து வருகிறார். அங்கன்வாடி மையம் ஒன்றில் பணிபுரிந்து வரும் விக்டரின் மனைவி வீட்டில் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு டியூஷன் நடத்தி வந்துள்ளார்.
இந்த டியூஷனில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவ - மாணவிகள் 10க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இந்நிலையில் தன் மனைவி இல்லாத போது, மாணவ- மாணவிகளுக்கு டியூஷன் நடத்தி வந்த விக்டர், டியூசன் படிக்க வந்த சிறுமிகள் 9 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்கள் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிகளில், இரு சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் செங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் நேற்றிரவு போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விக்டரை கைது செய்து, பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?