பேச்சுரிமை தான் உண்டு; பொய் பேசி பிதற்றுவதற்கு உரிமையில்லை! Dhinasari Tamil %name%
‘ தமிழக வாக்காளர் பட்டியலில் 6.5 லட்சம் பிஹாரிகளைச் சேர்க்க, பாஜக தூண்டுதலில் தேர்தல் கமிஷன் சதி செய்கிறது ‘ என்று எதிர்க்கட்சிகள் கூறுவது அபத்தமான குற்றச்சாட்டு.
‘ தேர்தல் கமிஷன் வாக்குகளைத் திருடுகிறது ‘ என்ற ராகுலின் குற்றச்சாட்டைப் பின்பற்றி, ப. சிதம்பரம், திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இப்படி புகார் கூறுகின்றனர்.
பிஹாரிலிருந்து வந்து இங்கே வேலை தேடிக்கொண்டு இங்கேயே செட்டில் ஆனவர்களை இம்மாநில வாக்காளர்களாகத்தான் கருத முடியும். அப்படி எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
அவர்களுக்கு பிஹாரில் சொந்த வீடு இருந்தாலும், இங்கே வாக்குரிமை பெற தடையில்லை.
இந்திய வாக்காளர்கள் இந்தியாவில் எங்கும் வாக்களிக்கலாம். இரண்டு இடத்தில் வாக்களிக்க முடியாது . அவ்வளவுதான்.
தமிழக மக்களும் இதே போல பிற மாநிலங்களில் வாக்களிக்க முடியும்.
குடியுரிமை பெறாத அயல் நாட்டவர்களின் பெயர்களைச் சேர்க்க வேண்டும், இந்தியாவில் ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர் இன்னொரு மாநில வாக்காளர் பட்டியலில் இடம் பெறக்கூடாது- என்றெல்லாம் இஷ்டம் போல பேசுவது முற்றிலும் அரசியலுக்காக மட்டுமே.
தமிழக வாக்காளர் பட்டியலில் பிற மாநிலத்தவர் இடம் பெறுவது, தமிழக வாக்காளர்களின் உரிமையைப் பாதிக்கும், இது மாநில உரிமைக்கு எதிரானது – என்ற வாதம் பொருளற்றது.
மாநில உரிமை என்ற கோஷமே ஒரு மாயை. எல்லா மாநிலங்களும் சமமே தவிர, எந்த மாநிலத்துக்கும் தனி உரிமைகள் இல்லை. அதனால்தான் காஷ்மீரின் சிறப்பு உரிமையும் பறிக்கப்பட்டது.
மாநில உரிமை என்பது சரியென்றால், மாவட்ட உரிமை, தாலுகா உரிமை, வார்டு உரிமைகளும் சரியாகி விடும்.
உண்மையில் முக்கியத்துவம் பெறுவது மக்கள் உரிமை மட்டுமே.
விவரம் தெரிந்தவர் என்று கருதப்படும் ப. சிதம்பரம் கூட வேண்டுமென்றே திருமாவளவன் வைகோ லெவலுக்கு இறங்கிப் பேசுவது பரிதாபத்திற்குரியது.
தேர்தல் மோசடி மூலம் மோடி பிரதமராகி விட்டார் என்ற ராகுலின் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது.
தேர்தல் பணியில் இருப்பவர்கள் அனைவரும் அரசு ஊழியர்கள். இப்படியொரு பெரும் மோசடி நடத்துவது சாத்தியமற்றது. அப்படி நடந்திருந்தால், தேர்தல் நடக்கும்போதே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கும்.
இந்திய பகுதியில் 2000 சதுர கிலோ மீட்டர் தூரம் சீனா ஆக்கிரமித்து விட்டது என்ற ராகுலின் பொறுப்பற்ற குற்றச்சாட்டை சுப்ரீம் கோர்ட்டும் கண்டித்துள்ளது.
தோல்வி பயம் வந்தால், முன் எச்சரிக்கையாக தாறுமாறாகப் பேசுவது அரசியல்வாதிகளுக்கே உரிய இலக்கணம்.
நம் நாட்டில் பேச்சுரிமை பிதற்றல் உரிமையாகி விட்டது.
பேச்சுரிமை தான் உண்டு; பொய் பேசி பிதற்றுவதற்கு உரிமையில்லை! News First Appeared in Dhinasari Tamil