ஆகஸ்ட் 5ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் உத்தரவு!
Dinamaalai August 04, 2025 02:48 AM

ஆகஸ்ட் 5 ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலய பெருவிழாவை முன்னிட்டு, அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்  தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் இது பொருந்தும்.  

அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுர் விடுமுறை நாளில் அனைத்து சார்நிலை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளா்களை கொண்டு செயல்படும். உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில்  ஆகஸ்ட் 9 ம் தேதி (சனிக்கிழமை) முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்படுகிறது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.