18 வகையான பலகாரங்கள் படைத்து ஆடிப்பெருக்கு வழிபாடு... தாமிரபரணி ஆற்றங்கரையில் குவிந்த பெண்கள்!
Dinamaalai August 05, 2025 01:48 PM

தமிழகத்தில் நேற்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நீர்நிலைப் பகுதிகளில் பெண்கள் குவிந்தனர். நெல்லை தாமிரபரணி நதிக்கு 18 வகையான பலகாரங்கள் படைத்து சுமங்கலி வழிபாடு நடத்தினர்.

நேற்று மாலை தாமிரபரணி நதிக்கு பூஜை செய்யும் சிறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. ஆடி 18ம் பெருக்கன்று சப்த கன்னிகளை வணங்கி வழிபட்டால் நன்மை பயக்கும் என்பது ஐதீகம். ஆடி மாதத்தில் 18ம் நாள் பெருக்கு அன்று காவிரி, தாமிரபரணி, வைகை உள்ளிட்ட ஆறுகளை பல நூற்றாண்டுகளாக பொதுமக்கள்  வழிபட்டு வருகின்றனர். அங்கு மலர் தூவி, தீபாராதனை காட்டி வழிபடுவார்கள்.

அதன்படி தமிழகத்தில் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றங்ரையில் ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளான நேற்று 18 வகையான நைவேத்தியங்கள் படைத்து மக்கள் வழிபட்டனர். 

புதுமண தம்பதிகள் மற்றும் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தி தாலி பிரித்துக் கட்டும் வைபவம் நடத்தினர்.  நெல்லை குறுக்குத் துறை தாமிர பரணி ஆற்றங்கரையில் சுப்பிர மணிய சுவாமி கோவில் படித்துறையில் திரளான பெண்கள் நேற்று காலை முதலே திரண்டு தாமிரபரணி நதிக்கு 18 வகையான பலகாரங்கள் படைத்து சுமங்கலி வழிபாடு நடத்தினர்.

அதனை தொடர்ந்து புதுமண தம்பதிகள் மட்டுமல்லாது ஏற்கனவே திருமணமான பெண்களும் கலந்து கொண்டு தாலி பிரித்து கட்டும் சடங்குகள் செய்து தாமிரபரணி அன்னையை வழிபட்டனர். அதே போன்று திருச்சி அம்மா மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று சுமங்கலிகள், இளம்பெண்கள் என்று திரளாக திரண்டு காவிரி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு கொண்டாடினர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.