TVK's 2nd State Conference: தமிழக வெற்றிக் கழக மாநாட்டு தேதி மாற்றம்.. புதிய தேதியை அறிவிக்கும் விஜய்..!
TV9 Tamil News August 05, 2025 09:48 PM

மதுரை, ஆகஸ்ட் 4: தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam) 2வது மாநில மாநாடானது வருகின்ற 2025 ஆகஸ்ட் 25ம் தேதி நடிகர் விஜய் தலைமையில் மதுரையில் (Madurai) நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், நிர்வாகம் மற்றும் விநாயகர் சதுர்த்தி தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாக, வருகின்ற 2025 ஆகஸ்ட் 18 முதல் 22 வரை புதிய தேதியை முடிவு செய்யுமாறு காவல்துறை தவெக கட்சியிடம் கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாட்டுக்கான புதிய தேதியைவிஜய் (TVK Vijay) நாளை அதாவது 2025 ஆகஸ்ட் 4ம் தேதி அறிவிக்கிறார். வருகின்ற 2025 ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால் மாநாடு தேதியை மாற்ற முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தவெக 2வது மாநில மாநாடு:

கடந்த 2025 ஜூலை 17ம் தேதி மதுரை மாவடம், பாறைப்பட்டியில் உள்ள மாநாட்டு இடத்தில் பந்தல் அமைப்பை அமைப்பதன் மூலம் நிகழ்விற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியது. அதே நாளன்று, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், மாநாட்டிற்கான அனுமதி கோரி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறையான விண்ணப்பத்தை சமர்ப்பித்தார்.

ALSO READ: இதுநடந்தால் விஜயுடன் கூட்டணி முடிவு.. பிரேமலதா விஜயகாந்த் பளீச் பதில்..!

காவல்துறை உத்தரவு அளிக்கும் என்ற நம்பிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கான அதன் அடிப்படை பணிகளை தொடர்ந்தது. இருப்பினும், விநாயகர் சதுர்த்தி வருகின்ற 2025 ஆகஸ்ட் 27ம் தேதி கொண்டாடப்படுவதால், 2025 ஆகஸ்ட் 25ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தேதியை மாற்றவேண்டும் என்றும், பாதுகாப்பு மற்றும் கூட்ட மேலாண்மை சவால்கள் காரணமாக அந்த நேரத்தில் மாநாட்டை நடத்துவதைத் தவிர்க்குமாறு காவல்துறை தவெகக்கு கோரிக்கை வைத்தது.

என்.ஆனந்த் விளக்கம்:

கெட்டதிலும் ஒரு நல்லது சாமி தரிசனம் சீக்கிரம் கிடைக்க போது @TVKVijayHQ ! 🙌🙏❤️‍🔥#தமிழகவெற்றிக்கழகம் #TVK pic.twitter.com/YOVxTZLbhr

— Jiven ツ (@VijayGeekTweets)

அதை தொடர்ந்து, 2025 ஆகஸ்ட் 17ம் தேதி நிகழ்வை நடத்த தமிழக வெற்றிக் கழக முன்மொழிந்தது. இருப்பினும், சுதந்திர தினம் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் 2025 ஆகஸ்ட் 15ம் தேதியை சுற்றியுள்ள நாட்களில் அதிக விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை காரணம் காட்டி அந்த தேதிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இந்த கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, 2025 ஆகஸ்ட் 18 முதல் 22 வரை மாநில மாநாட்டிற்கு ஒரு புதிய தேதியை தேர்ந்தெடுக்குமாறு காவல்துறை தமிழக வெற்றிக் கழகத்திற்கு முறையாக அறிவுறுத்தியது.

ALSO READ: சர்வாதிகார, சனாதான சங்கிலிகளை நொறுக்கி தள்ளக்கூடிய ஒரே ஆயுதம் கல்வி தான் – கமல்ஹாசன்..

தவெக கட்சிக்கு சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தநிலையில், திருத்தப்பட்ட தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை அதாவது 2025 ஆகஸ்ட் 5ம் தேதி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.