நீண்ட காலமாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். அவருக்கு வயது 79.
கிட்னி பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சத்யபால் மாலிக் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது அந்த மாநிலத்தின் கவர்னராக சத்யபால் மாலிக் இருந்தார்.ஆகஸ்ட் 2018 முதல் அக்டோபர் 2019 வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கடைசி கவர்னராக இருந்தவர் சத்யபால் மாலிக்.
ஜம்மு காஷ்மீரைத் தொடர்ந்து, கோவாவின் 18வது கவர்னராகவும், பின்னர் அக்டோபர் 2022 வரை மேகாலயாவின் 21வது கவர்னராகவும் சத்யபால் மாலிக் பதவி வகித்தார். இருப்பினும், அதன் பிறகு உடல்நிலை பாதிப்புகளால் பொது வாழ்க்கையில் இருந்து விலகி இருந்தார்.
உத்தர பிரதேச மாநிலம் பக்பத் பகுதியை சேர்ந்த சத்யபால் மாலிக் எம்.எல்.ஏ, எம்.பி உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்துள்ளார். கடந்த 2004ம் ஆண்டு பாஜகவில் இணைந்த சத்யபால் மாலிக் 2012ம் ஆண்டு அக்கட்சியில் தேசிய துணைத்தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?