மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் – டாவ்கி சாலையில் நடந்த பயங்கர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி இரவு 9 மணியளவில், ஷில்லாஙிலிருந்து பைனூர்ஸ்லா நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு கார், ரிங்கைன் என்ற இடத்தில் சாலையை விட்டு தவறி பள்ளத்தாக்கில் நேராக விழுந்தது.
அந்த சாலையில் பாதுகாப்பு சுவர் இல்லாததும், இரவில் பார்வை தெளிவாக இல்லாததும் இந்த விபத்திற்கு காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. 2023ம் ஆண்டு முதல் அந்த சாலையில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. விபத்துக்குப்பின் தகவல் பெற்ற போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்துக்குள்ளான காரையும் (ML05-U-4926), காரில் இருந்த ஐந்து உடல்களையும் மீட்டனர்.
அவர்களின் அடையாள அட்டைகள் மூலம் குடும்பத்தினரை தொடர்பு கொண்டுள்ளனர். இந்த விபத்து அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.