பல ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த பல்கேரிய கணிப்பாளர் பாபா வங்காவின் கணிப்புகள் இன்றும் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
2025-ஆம் ஆண்டிற்கான அவரது கணிப்பு, தற்போது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது. விண்வெளியில் 3I/ATLAS எனும் மர்ம பொருள் பூமியை நோக்கி வருவதாகக் கண்டறியப்பட்டதையடுத்து இந்த கணிப்பு மேலும் வலுவடைந்துள்ளது.
பாபா வங்காவின் கணிப்பு என்ன?
"2025ல் மனித இனம் வேற்று கிரகவாசிகளுடன் தொடர்பு கொள்ளும், இது உலகளாவிய நெருக்கடி அல்லது அழிவை ஏற்படுத்தலாம்" என பாபா வங்கா எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இந்த கணிப்பு, சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் 3I/ATLAS என்ற மர்ம பொருளை விண்வெளியில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து பலரும் அந்த கணிப்பு நடந்துவிடுமோ என்று நம்பி வருகின்றனர்.
3I/ATLAS, மர்மமான பொருள்
சிலியில் உள்ள தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்ட 3I/ATLAS, மணிக்கு 1.3 லட்சம் மைல் வேகத்தில் பயணிக்கிறது. இது 10-20 கிலோமீட்டர் அளவு கொண்டதாக, நியூயார்க்கின் மன்ஹாட்டன் நகரத்தின் அளவுக்கு நிகரானது என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் வேகமும், பயணப் பாதையும் விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் கவனம் பெற்று கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இது வேற்று கிரக விண்கலமா?
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அவி லோய்ப் உள்ளிட்ட சில விஞ்ஞானிகள், 3I/ATLAS-இன் அசாதாரண பண்புகள் காரணமாக இது வேற்று கிரக விண்கலமாக இருக்கலாம் எனக் கூறியுள்ளனர். ஆனால் இன்னும் சிலர் இது ஒரு விண்கல் அல்லது வால்மீன் என்று வாதிடுகின்றனர்.
நாசாவின் தகவலின்படி, இந்த பொருள் 2025 அக்டோபர் 30-ஆம் தேதி சூரியனுக்கு மிக அருகில், சுமார் 130 மில்லியன் மைல் (210 மில்லியன் கிலோமீட்டர்) தொலைவில் இருக்கும்.
இது செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைக்கு உள்ளேயே இருக்கும். மேலும், இது 2025 நவம்பரில் பூமியை நெருங்கினாலும், பூமிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று நாசா உறுதியளித்துள்ளது.
யார் இந்த பாபா வங்கா?
பாபா வங்கா, செர்னோபில் பேரழிவு மற்றும் 9/11 தாக்குதல்கள் உள்ளிட்ட பல நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்ததாகக் கூறப்படும் முன்கணிப்பாளர். அவரது கணிப்புகள், இன்றும் உலகளவில் பலரால் வியப்புடன் பேசப்படுகின்றன.
3I/ATLAS-ன் வருகை மற்றும் பாபா வங்காவின் கணிப்பு ஒன்றிணைந்து, 2025-ஆம் ஆண்டு வேற்று கிரகவாசிகளுடனான தொடர்பு குறித்து பலரை சிந்திக்க வைத்துள்ளது. இது உண்மையில் வேற்று கிரக விண்கலமா அல்லது இயற்கையான விண்பொருளா என்பதை அறிய, விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஜப்பானில் மிக பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என ”மங்கா நாவல்” கணிப்பு – அச்சத்தில் சுற்றுலாப் பயணிகள்!