உத்தரகாண்ட் மாநிலம் தாராலி பகுதியில் இன்று திடீரென மேகவடிப்பு ஏற்பட்டு அதனை தொடர்ந்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் கட்டிடங்களும் அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்களும் அடித்து செல்லப்பட்டதாக அஞ்சப்படுகிறது. இதுகுறித்து அறிந்த காவல்துறையினரும் ராணுவம் மற்றும் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை 50 கட்டிடங்கள் அடித்து செல்லப்பட்டதாகவும், 60 பேர் மாயமானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கட்டிடங்கள் அடித்து செல்லப்படும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.