ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் நடந்த எரிவாயு சிலிண்டர் வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் அருகே அமைந்துள்ள பழைய உதிரிபாகக் கடையில் வெல்டிங் பணிகள் நடைபெற்று வந்தன.
அப்போது அங்கு இருந்த எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்து பெரும் சத்தத்துடன் விபத்து ஏற்பட்டது.
சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நிகழ்ந்ததும், மீட்புப் படையினர் விரைந்து சென்று உதவிப் பணிகளில் ஈடுபட்டனர்.
விபத்துக்கான காரணம் குறித்து தெளிவான தகவல் இன்னும் வெளிவராத நிலையில், விசாகப்பட்டினம் மாநகர காவல் ஆணையர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.