இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்தக் காணொளியில், ஒரு நபர் கார் ஓட்டிக் கொண்டிருக்கும்போது, எதிரில் வரும் மற்றொரு காரில் இருந்தவர் தொடர்ந்து ஹெட்லைட் ஒளியை அடிக்கிறார். இதில் முகத்தில் லைட் வெளிச்சம் பட்டு கோபமடைந்த கார் ஓட்டுநர், தனது ஹெல்மெட்டை எடுத்து தலையில் அணிந்து கொண்டு லைட் அடித்தவாறு வந்த காரை வேண்டுமென்றே இடித்துத் தள்ளுகிறார். இந்தச் சம்பவம் பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இந்தக் காணொளி வைரலாகி நெட்டிசன்கள் சிலருக்கு இந்த கார் ஓட்டுநரின் செயல் அதிக கோபத்தின் வெளிப்பாடாகத் தோன்றுகிறது. ஆனால், பலருக்கு இது சரியான பதிலடி என்று தோன்றுகிறது.
View this post on Instagram
A post shared by Adhusari_Official (@adhusari_official)