தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவினர் அனைவரும் ஒன்றாக இணைந்து வெற்றி பெற வேண்டும் என சசிக்கலா அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக பல உட்கட்சி விவகாரங்களை சந்தித்தது. சசிகலா சிறைக்கு சென்றுவிட்ட நிலையில், டிடிவி தினகரன் ஒரு பக்கம் அமமுகவை தொடங்கினார். அதிமுகவில் ஏற்பட்ட பிளவில் தற்போது ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஓரம்கட்டப்பட்டுள்ளனர்.
இவ்வாறாக அதிமுக பலவாறாக பிரிந்து கிடப்பது கவலை அளிப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவினர் மீண்டும் ஒன்று பட்டால் தேர்தலில் வெற்றி உறுதி என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் “நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். நாம் ஒன்றிணைவதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு நாம் செய்கின்ற உதவி. ஒன்றுபட்ட அதிமுகவாக நாம் போட்டியிட்டால் 2026ல் வெற்றி நிச்சயம். வாருங்கள் வென்று காட்டுவோம்” என அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் இதற்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் செவிசாய்ப்பதே சந்தேகம்தான் என அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.
Edit by Prasanth.K