மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் தல்லாகுளம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். 6ம் வகுப்பு வரை பழைய ஆயக்குடி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்த மாணவன், இந்த ஆண்டுதான் மாநகராட்சி பள்ளியில் 7ம் வகுப்பு சேர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு மாணவன் சீருடையில் செல்லாததைப் பார்த்த தலைமை ஆசிரியை, “எதற்காக இது போன்று கலர் பேண்ட் அணிந்து வந்தாய்?” எனக்கூறி சத்தம் போட்டுள்ளார். பின்னர் அந்த மாணவனின் கையை பிடித்து திருகி அடித்ததாகவும், இதனால் மாணவனுக்கு கையில் தசை கிழிவு ஏற்பட்டு தற்போது கட்டு போடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து மாணவன் தனது தந்தையுடன் மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை சென்று பள்ளி தலைமை ஆசிரியை மீது புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மாணவனின் தந்தை கூறும் போது, “எனது மகனுக்கு பள்ளியில் சீருடை வழங்கிய போது பேண்ட் அளவு சரியில்லை என கூறினேன். அதற்கு சட்டை மட்டும் கொடுத்து விட்டு பேண்ட் வெளியில் எங்காவது வாங்கிக் கொள்ளுங்கள் என கூறி விட்டனர். அதனால் எனது நண்பர் மூலமாக கிடைத்த சீருடை பேண்ட்டை அணிந்து பயன்படுத்தி வந்தான். சம்பவத்தன்று வேறு கலர் பேண்ட் அணிந்து சென்றதால் தலைமை ஆசிரியை திட்டி, கையை திருகி அடித்துள்ளார். இதனால் என் மகனுக்கு காயம் ஏற்பட்டு கட்டு போடும் நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?