சென்னையில் கனமழை... 15 விமானங்கள் தாமதம்... பெங்களூரு திரும்பிய விமானங்கள்!
Dinamaalai September 01, 2025 05:48 PM

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆகஸ்ட் 30ம் தேதி மேகவெடிப்பு காரணமாக  நள்ளிரவில் கனமழை கொட்டித் தீர்த்தது.  இதனால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிரங்க முடியாமல் நீண்டநேரம் வானில் வட்டமிட்டு கொண்டிருந்தன. 

குறிப்பாக, ஐதராபாத்தில் இருந்து 140 பயணிகளுடன் சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், டெல்லியிலிருந்து  164 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா விமானம், மங்களூருவில் இருந்து 74 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், பிராங்பாட்டில் இருந்து 268 பயணிகளுடன் வந்த லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 4 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

இதே போல் கோலாலம்பூர், ஹாங்காங், திருவனந்தபுரம், இந்தூர் மற்றும் டெல்லி உட்பட 8 விமானங்கள் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து  தாமதமாக தரை இறங்கின. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் கோலாலம்பூர், பிராங்க்பாட், ஹாங்காங், இலங்கை, துபாய், குவைத், மஸ்கட், சிங்கப்பூர், டெல்லி, புனே உட்பட  15 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

சென்னையில் தரையிறங்க  முடியாமல் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட 4 விமானங்களும் சென்னையில் மழை ஓய்ந்த பின்பு  ஒன்றன்பின் ஒன்றாக பெங்களூருவில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்தன. இதனால் விமானப் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.