நடிகர் அஜித்குமாரின் மங்காத்தா திரைப்படம் வெளியாகி 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் படத்தின் அறிவிப்பு வீடியோவை பகிர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபி - அஜித்குமார் கூட்டணியில் உருவான அஜித்குமாரின் 50வது படம் ‘மங்காத்தா’. வில்லன் காதாப்பாத்திரம் ஏற்று அஜித் நடித்திருந்த இந்தப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அத்துடன் அஜித்தின் திரைப்பயணத்திலும் மங்காத்தா ஒரு திருப்புமுனையாக அமைந்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பிய மங்காத்தா படத்தில், அஜித்துடன் அர்ஜுன், திரிஷா, வைபவ், அஞ்சலி, பிரேம்ஜி, உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் மங்காத்தா திரைப்படம் வெளியாகி இன்றோடு 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. வித விதமான பட அறிவிப்பு வீடியோக்கள் தற்பொழுது இயல்பான ஒன்றாக மாறியுள்ள நிலையில், கதாநாயகனை வைத்து கோலிவுட்டின் முதல் அறிவிப்பு வீடியோவை மங்காத்தா படக்குழுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் அறிவிப்பு வீடியோவை பகிர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.