நேற்று இரவு சென்னையில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பால் ஒரு மணிநேரத்தில் 100 மி.மீ. மழைக்கு மேல் பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு 11 மணிமுதல் பலத்த மழை பெய்து வருகின்றது. சென்னை ராயபுரம், பாரிமுனை, வடபழனி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகின்றது.
சென்னை புறநகர்ப் பகுதிகளான மாதவரம், மணலி, அம்பத்தூர், திருவெற்றியூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கி வருகின்றது.
இது குறித்து பிரதீப் ஜான் வெளியிட்ட பதிவில், சென்னையில் இந்தாண்டின் முதல் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு மணிநேரத்தில் பல்வேறு பகுதிகளில் 100 மி.மீ. மழை பொழிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தென் சென்னை பகுதிகளை நோக்கி மேகக் கூட்டங்கள் நகர்ந்து வருவதாகவும் அடுத்து அப்பகுதிகளில் மழை பொழியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?