அரசு பள்ளி ஒன்றின் கழிவறையில் 9ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்ற சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பள்ளி முதல்வர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் ஷாஹாபூர் தாலுகாவில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் சம்பவத்தன்று மதியம் 2.30 மணியளவில் பள்ளியின் கழிப்பறையில் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இந்த சம்பவம் பள்ளி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக மாணவியும், குழந்தையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி நிர்மலா, ஷாஹாபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் மாணவியிடம் விசாரித்த போது, தனது கர்ப்பத்துக்கு யார் காரணம் என்பது குறித்த திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதை அதிகாரிகள் ரகசியமாக வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே பள்ளியின் முதல்வர் பாசம்மா, விடுதி வார்டன், அறிவியல் ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆகியோரை கர்நாடக மாநில கல்வி நிறுவன நிர்வாக இயக்குநர் காந்தராஜு, இடைநீக்கம் செய்தார்.
இது குறித்து போலீஸ் துணை ஆணையர் கூறுகையில், “பள்ளி நிர்வாகம் இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்க தவறிவிட்டது. இந்த வழக்கு குழந்தை திருமணம் உட்பட பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது” என்றார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?