Bomb: 'நான் நடித்த படங்களிலேயே சுவாரஸ்ய அனுபவத்தை கொடுத்த படம் இதுதான்' - அர்ஜுன் தாஸ்
Vikatan August 31, 2025 01:48 PM

விஷால் வெங்கட் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ், காளி வெங்கட், நாசர், அபிராமி, உள்ளிட்ட சிலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'Bomb'.

இந்தப் படம் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட் 30) நடைபெற்றது.

'Bomb' movie

இதில் கலந்துகொண்டு பேசிய அர்ஜுன் தாஸ், "அநீதி என்ற படத்தில் நானும், காளி வெங்கட்டும் இணைந்து நடித்திருந்தோம்.

ஆனால், இரண்டு பேருக்குமான காட்சிகள் இல்லை. அந்த குறையை இந்த படம் நிவர்த்தி செய்திருக்கிறது.

நான் நடித்த படங்களிலேயே சுவாரஸ்யம் மிக்க அனுபவத்தை கொடுத்த படம் இதுதான்” என்று பேசியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய நடிகர் காளி வெங்கட், “பல படத்திற்கு ரிகர்சல் செய்துவிட்டு போவோம்.

ஆனால் இந்த படத்திற்கு இப்படி ரிகர்சல் செய்ய முடியவில்லை. இந்த படத்தில் உயிர் இல்லாத பிணம் போல நடித்துள்ளதால், இது ஒரு புது அனுபவமாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.

காளி வெங்கட்

இதையடுத்து பேசிய இசை அமைப்பாளர் டி இமான், “இந்த படத்தில் இசை கற்றுக் கொண்டவர்கள்தான் பாடல் பாடியுள்ளனர். அதுதான் இந்த படத்தின் இசையில் புதுமையை புகுத்தியுள்ளது" என்றிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.