Jothika: பிரபல நடிகை ஜோதிகா சமீபகாலமாகவே பாலிவுட்டில் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக்கொள்ள கோலிவுட் நடிகர்கள் மர்றும் தமிழ் சினிமாவை அசிங்கப்படுத்தி கொண்டே இருக்கிறார். அப்படி ஒரு சம்பவமும் தற்போது நடந்துள்ளது.
இந்தியில் ஒரு படத்தில் நடித்து அறிமுகமான ஜோதிகாவுக்கு அப்பொழுது பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதை தொடர்ந்து கேமியோ ரோல் மூலம் வாலி படத்தால் வரவேற்பை பெற்றார். இதையடுத்து தொடர்ச்சியாக அவருக்கு கோலிவுட்டில் வாய்ப்பு கிடைத்தது.
தமிழ் சினிமாவின் டாப் ஹிட் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து அசத்தினார். நடிகர் சூர்யாவுடன் நடித்து சமயத்தில் இருவரும் காதலிக்க தொடங்கினார். பல வருட காதலுக்கு பிறகு 2011ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.
திருமணத்துக்கு முன்பு வரை ஜோதிகாவுக்கு சந்திரமுகி உட்பட பல நல்ல படங்கள் கிடைத்தது. திருமணம் முடிந்து சில வருடங்கள் அமைதியாக இருந்தவர். 36 வயதினிலே படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து நிறைய கதையின் நாயகி படங்களில் நடித்தார்.
ஆனால் அவருக்கு இருந்த இடம் கிடைக்கவில்லை. இதனால் பாலிவுட் சினிமாவிற்கு தாவினார். அங்கு அவருக்கு ஷைத்தான் உள்ளிட்ட படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனை கூட ஒப்புக்கொள்ள முடிந்தது. ஆனால் அந்த படங்களின் புரோமோஷன் சமயங்களில் ஜோதிகா செய்வதுதான் தற்போது தமிழ் ரசிகர்களின் கோபத்தை கிளறி வருகிறது.
ஒவ்வொரு புரோமோஷன் சமயத்திலும் பாலிவுட்டை தூக்கி பிடித்து கோலிவுட்டை அசிங்கப்படுத்தி வந்தார். அந்த வகையில் இந்த முறை தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட எல்லா தென்னிந்திய நடிகர்களுடன் நடித்து விட்டேன். ஆனால் அவர்கள் போஸ்டரில் கூட நடிகையை போட்டு அஜய் தேவ்கான், மம்முட்டி செய்வது போல முக்கியத்துவம் தர மாட்டார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் ஜோதிகாவின் தென்னிந்திய படங்களின் போஸ்டர்களை இணைத்து போட்டு மத்தவங்களை பாராட்டலாம். அடுத்தவங்களை அசிங்கப்படுத்த கூடாது. இந்த போஸ்டரில் எல்லாம் நீங்க தானே இருக்கீங்க எனவும் கலாய்த்து வருகின்றனர்.