விநோத சடங்கு... தாலி கட்டியதும் மாப்பிள்ளைக்கு சாட்டையால் அடி!
Dinamaalai August 31, 2025 01:48 AM

 


உலகம் முழுவதுமே திருமணத்தின் போது கடைப்பிடிக்கப்படும் சடங்குகள் பல வகைப்படுகின்றன. அவற்றில் பிற நாடுகளிலும், பழங்குடி இன மக்களிடையேயும் விநோதமான பழக்கங்கள் இன்றளவிலும் கடைப்பிடிக்கப்பட்டு வரப்படுகின்றன. 

ஆனால் இந்தியாவில், ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டத்தின் புச்சுபல்லே குலத்தின் திருமணத்தில்,  மணமகனை 3 முறை கருப்பு சட்டையால் அடித்தால் மட்டுமே திருமணம் முழுமையானதாக இன்றளவிலும் கருதப்பட்டு வரப்படுகிறது. 

மணமகள் கழுத்தில் தாலி கட்டியவுடனேயே மணமகனை அவரது குடும்ப உறுப்பினர்கள் கருப்பு சாட்டையால் மூன்று முறை அடிக்கும் வழக்கம் இன்றளவிலும் நடைமுறையில் இருந்து வருகிறது.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு புச்சுபல்லே குலத்தினர் கங்கம்மா கோவிலில் இருந்து ஒரு பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் 5 கருப்பு சாட்டைகளை கண்டனர். அவர்கள் உடனடியாக கோவிலுக்கு சென்று எதோ தவறு நடந்துவிட்டது என்று கூறி தெய்வத்திடம் மன்னிப்பு கேட்டார்கள். அவர்கள் கனவில் கங்கம்மா தோன்றி உங்கள் குலத்தின் திருமணத்தின்போது மணமகனை கருப்பு சாட்டையால் 3 முறை அடிக்க உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து காலம் காலமாக திருமணத்தின்போது மாப்பிள்ளையை சாட்டையால் அடிக்கும் வினோத சடங்கு செய்து வருகின்றனர். அந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது. பத்ரம்பள்ளி தொண்டூர், இனங்களூர் லோமட புச்சி பள்ளே போடிவாரி பள்ளே மல்லேலா அகதூர் சந்த கோவூர் ஆகிய கிராமங்களில் புச்சுப்பள்ளே குலத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.