AIADMK: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு!
TV9 Tamil News August 30, 2025 06:48 PM

சென்னை, ஆகஸ்ட் 30: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் வைத்து அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (ஆகஸ்ட் 30) நடைபெறுகிறது. அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து மாவட்டத்தின் செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10.30 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பெரும் எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே எழுந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் சூறாவளி சுற்றுப்பயணம் 

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலமே உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. இப்படியான நிலையில் அதிமுகவும் கடந்த ஓராண்டாகவே கட்சியை வலுப்படுத்தி மக்களின் வாக்குகளை கவரும் விஷயத்தில் கவனம் செலுத்தி வருகின்றன. அதன்படி சமூக பிரச்னைகளுக்கு உடனடியாக குரல் எழுப்புவது, கண்டனம் தெரிவிப்பது, ஆர்பாட்டம்,போராட்டம் நடத்துவது என மக்கள் பிரச்னையில் தலையிட்டு வருகின்றன.

Also Read: ‘அதிமுகவுக்கு தான் ஓட்டு கேட்பேன்.. எனக்கு வேற ஆசையில்ல’ ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!

அதேசமயம் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 234 தொகுதிகளுக்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம் போல வருகை தருகிறார்கள். இதனால் 2026 சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

கட்சியின் அடிப்படை வளர்ச்சி கட்டமைப்பு

பொதுவாக ஒரு கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்பது அந்தக் கட்சியில் தலைமை தொடங்கி கடைசி கட்ட தொண்டர் வரை இடையேயான பிணைப்பு, கட்சியின் வளர்ச்சி அற்ற செயல்பாடு ஆகியவற்றை உறுதி செய்யும் நோக்கில் நடத்தப்படுகிறது. ஒரு கட்சியின் தலைமையானது மாவட்ட செயலாளர்கள் வழியே தான் கட்சியினுடைய கொள்கைகள் முடிவுகளை தொண்டர்களுக்கும் மக்களுக்கும் எடுத்துச் சொல்கிறார்கள்.

Also Read: அதிமுக – பாஜக கூட்டணி..! தன்னால் எந்த ஒரு கருத்தை கூற முடியாது.. அண்ணாமலை பளீச் பதில்!

இதில் ஒவ்வொரு மாவட்டத்தில் என்ன மாதிரியான சூழல் நிலவுகிறது என்பதை அறிந்து அதற்கு ஏற்ப வியூகம் வகுக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் தற்போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளது. பிற கட்சிகள் இணையும் நிலையில் யாருக்கு எந்த தொகுதியில் அதிக செல்வாக்கு இருக்கிறது என்பதை பொறுத்து இடங்கள் மற்றும் தொகுதிகள் ஒதுக்கீடு பணிகள் நடைபெறும் என சொல்லப்படுகிறது.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. தற்போது அந்த தொகுதியில் எந்த மாதிரியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. மக்களின் எதிர்பார்ப்புகள் என்பது உள்ளிட்டவை குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.