தமிழகத்தில் நடைபெறவிருந்த TET தேர்வு குறித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் நடைபெற இருந்த TET தேர்வு, நிர்வாக காரணங்களால் மாற்றப்பட்டுள்ளதாக TN ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, தேர்வுகள் இனி நவம்பர் 15 மற்றும் 16-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட தகவலில், கல்லறைத் திருநாளன்று தேர்வு நடைபெற இருப்பதால் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு மற்றும் கோரிக்கை எழுந்திருந்தது. இதனை கருத்தில் கொண்டு தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
TET தேர்வுக்கு தயாராகி வரும் ஆயிரக்கணக்கான போட்டியாளர்கள், புதிய தேதியின்படி தேர்வுகளை எழுத வேண்டியிருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு தற்போது கல்வி வட்டாரங்களில் முக்கிய செய்தியாக பேசப்பட்டு வருகிறது.