கேரளாவின் மலப்புரம் மாவட்டம் எடப்பட்டா, எப்பிகாட்டைச் சேர்ந்த 27 வயதுடைய ஆசிக், இணையத்தின் அரை மறைவில் செயல்பட்ட சைபர் மோசடி கும்பலின் முக்கியக்காரராக இருப்பது காவல்துறையின் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.
ஆன்லைன் முதலீடு என்ற பெயரில் அதிக லாபம் கிடைக்கும் என பொதுமக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தி, பலரையும் போலி வங்கி கணக்குகளுக்கு பணம் செலுத்த தூண்டிய ஆசிக், கணினியை ஆயுதமாக பயன்படுத்தி பலரை ஏமாற்றி வந்ததாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

அவரது நடவடிக்கைகள் பொதுச்சமூக ஒழுங்கை பாதிக்கும் வகையில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து, திருநெல்வேலி மாநகர துணை கமிஷனர் (மேற்கு) பிரசன்னகுமார், பொறுப்புப் போலீஸ் உதவி கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் மற்றும் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு ஆகியோரின் பரிந்துரையை அடுத்து, மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி கடும் நடவடிக்கை எடுத்தார்.
அதன்படி, சைபர் மோசடிக்கு இணங்க செயல்பட்டு வந்த ஆசிக்கெதிராக குண்டர் தடுப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்டு, அவர் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.