பட்ஜெட் விலையில், அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது லாவா பிளேஸ் AMOLED 2 5ஜி!
TV9 Tamil News August 18, 2025 10:48 PM

இந்தியாவில் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றுதான் லாவா (Lava). இதன் காரணமாக இந்த நிறுவனம் இந்தியாவில் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது லாவா பிளேஸ் AMOLED 2 5ஜி ஸ்மார்ட்போனை (Lava Blaze AMOLED 2 5G Smartphone) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் அறிமுகமானது லாவா பிளேஸ் AMOLED 2 5ஜி ஸ்மார்ட்போன்

இந்தியாவை தலைமை இடமாக கொண்டுள்ள லாவா நிறுவனத்தின் புதிய மாடல் ஸ்மார்போன் ஆன இந்த லாவா பிளேஸ் AMOLED 2 5ஜி ஸ்மார்ட்போன் மொத்தம் இரண்டு வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு இயங்குதள அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : இதுவரை இல்லாத வகையில் 7,000 mAh பேட்டரியுடன் அறிமுகமான போக்கோ எம்7 பிளஸ் ஸ்மார்ட்போன்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

லாவா பிளேஸ் AMOLED 2 5ஜி ஸ்மார்ட்போன் – சிறப்பு அம்சங்கள்

Blaze AMOLED 2 5G – Price: ₹13,499
Sale Is Live on Amazon.
Available at your nearest retail store.

✅ 16.94cm (6.67”) FHD+ AMOLED Display
✅Slimmest in the Segment*– 7.55mm body with Linea Design
✅ 50MP AI Camera with Sony Sensor
*Source:Techarc (Smartphones under 15K) pic.twitter.com/SKkSq1aDNh

— Lava Mobiles (@LavaMobile)

இந்த லாவா பிளேஸ் AMOLED 2 5ஜி ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மீடியேடெக் டைமன்சிட்டி 7060 சிப்செட் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 15 இயங்குதளத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Vivo V60 : அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது விவோ வி60.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

கேமரா மற்றும் இதர சிறப்பு அம்சங்கள்

இந்த லாவா பிளேஸ் AMOLED 2 5ஜி ஸ்மார்ட்போனில் பின்பக்கத்தில் 50 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ் 752 சென்சார் இடம்பெற்றுள்ளது. இதேபோல 8 மெகாபிக்சல் செஃல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5,000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 33 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.13,499-க்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்போன் ஆகஸ்ட் 16, 2025 முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.