நெகிழ்ச்சி! ரூ.50,000 வரை சகோதரிகள் சேமித்துள்ளன... 51 மாதங்களுக்குள் விடியல் பயணத்தின் வெற்றி...! - முதலமைச்சர்
Seithipunal Tamil August 19, 2025 12:48 AM

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டதாவது,"வீட்டவிட்டு வெளியே சென்று வீட்டுக்கு வரணும்னாலே ரூ.50 தேவை.

அதனால்தான் நான் வீட்டுலயே இருந்துக்குறேன்" என்ற எண்ணத்தை - பொருளாதாரத் தடையைத் தகர்த்து, கல்விக்கான - வேலைவாய்ப்புக்கான - முன்னேற்றத்துக்கான பயணத்தைச் சாத்தியமாக்கியது திராவிட விடியல் பயணம்! நமது Dravidian Model-இன் 51 மாதங்களுக்குள் விடியல் பயணத்தின் மூலம் நமது சகோதரிகள் ரூ.50000 வரை சேமித்துள்ளதும் - அந்தத் திட்டத்துக்கு அரசு செலவழிப்பதும், மகளிர் முன்னேற்றத்துக்கான முதலீடு!" என்று பதிவிட்டுள்ளார்.

இது தற்போது இணையதளத்தில் பரவி பல வரவேற்புகளை பெற்று வருகிறது.இதற்கு பலரும் பாராட்டியும் வருகின்றனர்.


 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.