தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கான அசத்தல் திட்டம்..! இலவசமாக கிடைக்கப்போகும் லேப்டாப்… யாருக்கெல்லாம் தெரியுமா..?
SeithiSolai Tamil August 19, 2025 02:48 AM

தமிழக அரசு, அரசு கல்லூரி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கில் நீண்ட நாள்களாக காத்திருந்த இலவச லேப்டாப் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உள்ளது. இந்த முறை, பழைய மாடல்களை விட பல மடங்கு மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் லேப்டாப்புகள் வழங்கப்பட உள்ளது.

நவீன காலத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், 8GB RAM, Intel Core i3 அல்லது அதற்கு சமமான பிராசஸர், உயர்தர திரை, USB-C போர்ட், Microsoft Office 365 போன்ற வசதிகளுடன் கூடிய லேப்டாப்புகள் அக்டோபர் மாதம் முதல் மாணவர்களிடம் விநியோகிக்கப்படும் என அரசு தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

10 லட்சம் மாணவர்களுக்கு முதற்கட்டம் – ஒப்பந்தம் இறுதி கட்டத்தில்

திட்டத்தின் முதல் கட்டமாக 10 லட்சம் மாணவர்கள் இலவச லேப்டாப்புகளை பெற உள்ளனர். ஒரு லேப்டாப்பிற்கு ரூ.23,000 வரை மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்துக்கான ஒப்பந்தம் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. மூன்று முன்னணி நிறுவனங்கள் போட்டியிடும் நிலையில், விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகி, தயாரிப்பு பணிகள் தொடங்கும்.

இதில் வெற்றி பெறும் நிறுவனம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தகவல். இதைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக மேலும் 10 லட்சம் லேப்டாப்புகள் வழங்கப்படும் என்றும் அரசு திட்டமிட்டுள்ளது.

பராமரிப்பு மையங்கள், ஆன்லைன் புகார் வசதியுடன் முழு பாதுகாப்பு

மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த லேப்டாப்புகள் பழுதுபட்டால் பராமரிக்க சிறப்பான அமைப்புகள் தயார் நிலையில் உள்ளன. மாவட்ட வாரியாக பராமரிப்பு மையங்கள் அமைக்கப்படும்; மேலும் ஆன்லைனில் மாணவர்கள் தங்களின் புகார்களை பதிவு செய்து, அதன் நிலையைவும் தங்கள் வசதிக்கேற்ப கண்காணிக்க முடியும். கல்வி பயணத்தில் மாணவர்களுக்கு வலுவாக துணையாக இருக்கும் இந்த திட்டம் மீண்டும் தொடங்குவதால் மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.