நேத்து வந்தவங்கள கேப்டனுடன் கம்பேர் பண்ணக்கூடாது!.. பளார்னு சொன்ன பிரேமலதா விஜயகாந்த்..
CineReporters Tamil August 20, 2025 09:48 PM

தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய ரஜினி, கமல் என்னும் இரு இமயங்களுக்கு நடுவில் அவர்ளுக்கு இணையான ஆளுமை செய்தவர் விஜயகாந்த். குறிப்பாக தென் மாவட்டங்களில் மக்களின் சூப்பர் ஸ்டார் என்றால் அது விஜயகாந்த் தான். நல்ல உயரம் தமிழ்நாட்டுக்கு உரிய நிறத்துடன் கணீர் வசன உச்சரிப்பு எனக்கு அனைத்தும் தென் மாவட்ட காரர்களின் சாயலில் இருந்ததால் விஜயகாந்தை கொண்டாட ஆரம்பித்தார்கள்.

தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து அதிரடி ஆக்சன் ஹீரோவாக உருவெடுத்தார். விஜயகாந்தின் சண்டை காட்சிகளை பார்க்கவே ரசிர்களின் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதும். அப்படி ஒரிஜினாலிட்டியுடன் எந்தவித டுப்பும் பயன்படுத்தாமல் நடிப்பதில் திறமை வாய்ந்தவர் விஜயகாந்த். அவரிடம் சார் இது கொஞ்சம் ரிஸ்க்கான சண்டை காட்சி இதில் டுப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொன்னால் அதற்கு அவர்,” அவரும் ஒரு உயிர் தானே அதனால் நானே இதை செய்கிறேன்” என்று துணிச்சலுடன் ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் நடித்திக் கொடுப்பார்.

#image_title

அப்படி நடித்து இதுவரை எந்தவித அடியும் எந்தவித துயர செய்தியும் விஜயகாந்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்தது இல்லை அவ்வளவு நேர்த்தியாக செய்வார். அதேபோல அவரின் படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் சமபந்தி உணவு முறை வழங்கப்படும். மற்ற படப்பிடிப்பு தளங்களில் பொட்டலம் சாப்பாடு வழங்கப்பட்ட காலங்களில் இவருடைய திரைப்பட படபிடிப்பு நடைபெறும் இடங்களில் வாழை இலை விரித்து கறி விருந்து நடைபெறும். அப்படி தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு திரையில் மட்டும் ஹீரோவாக இல்லாமல் நிஜத்திலும் ஹீரோவாக இருந்து மக்களின் மனங்களில் நிலைத்து நின்றார்.

அதனால் ஜெயலலிதா, கருணாநிதி என இரு பெரும் இமயங்கள் அரசியலில் ஜொலித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அவர்களை எதிர்த்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேதிமுக) தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலிலும் மக்களுக்காக பாடுபட்டார். உதவி செய்வதில் விஜயகாந்த் நிகர் எவருமில்லை. உதவி என்று ஓடி வந்தவருக்கும் உதவுவார், தேவைப்படுபவர்களுக்கும் ஓடி சென்று உதவக்கூடியவர்.

#image_title

தமிழ்நாட்டின் முதலமைச்சராக உயர்ந்து மக்களுக்காக சேவை செய்வார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூழ்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் விஜயகாந்த் உயிரிழந்தார். அவரின் இழப்பு தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் தற்பொழுது தேதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேப்டனின் புகழ் பாடியுள்ளார். மயிலாடுதுறையில் ”உள்ளம் தேடி இல்லம் நாடி’ பரப்புரை நிகழ்ச்சி மேற்கொண்ட அவரிடம் தவெக மாநாடு குறித்த கேள்வி கேட்கப்பட்டது அதற்கு


”கேப்டன் மக்களுக்கான தலைவர் இறங்கி வேட்டியை மடித்து கட்டினார் என்றால் மழை, வெள்ளம், புயல் எதுவாக இருந்தாலும் எதற்கும் பயப்பட மாட்டார். களத்தில் இறங்கி மக்களுக்கு பணி செய்கின்ற ஒரு உத்தமராக தான் கேப்டன் வாழ்ந்தார். சம்பாதித்த அத்தனையும் மக்களுக்கு உதவி செய்தவர் கேப்டன். அதனால கேப்டன் கூட இங்கே யாரையும் கம்பேரே பண்ண முடியாது. கேப்டனுக்கு நிகர் கேப்டன் தான்”. இவ்வாறு கூறியுள்ளார். விஜயின் மாநாட்டை குறித்த கேள்விக்கு பிரேமலதா இப்படி பதில் அளித்திருப்பது விஜய் எந்த காலத்திலும் விஜயகாந்த் ஆக மாற முடியாது என்று சுற்றி வளைத்து சொல்லி இருக்கிறார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.