பிரதமர் மோடிக்கு 2 கோரிக்கைகளை வைக்கிறேன்.. செய்வீர்களா? ஜெயலலிதா பாணியில் விஜய் கேள்வி..!
WEBDUNIA TAMIL August 22, 2025 07:48 AM

மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில், அதன் தலைவர் விஜய் தனது உரையின் மூலம் சில முக்கியமான கோரிக்கைகளையும், அரசியல் நிலைப்பாடுகளையும் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக பிரதமர் மோடிக்கு அவர் இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அவர் வைத்த கோரிக்கைகள் இவைதான்:

இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு வரும் 800க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்காக, கச்சத்தீவை மீட்டுத் தர வேண்டும்

நீட் தேர்வினால் நடக்கும் துன்பங்களைச் சுட்டிக்காட்டி, நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கூறி இந்த இரண்டு கோரிக்கைகளை "செய்வீர்களா பிரதமர் அவர்களே" என்று ஜெயலலிதா பாணியில் கேள்வி எழுப்பினார்.

மேலும் "கட்சி தொடங்க முடியாது என்றார்கள், தொடங்கிவிட்டோம்; மாநாடு நடத்த முடியாது என்றார்கள், நடத்திக் காட்டிவிட்டோம். அடுத்து ஆட்சியைப் பிடிக்க முடியாது என்கிறார்கள். ஆட்சியைப் பிடித்துக் காட்டட்டுமா?" என்று தொண்டர்களுக்கு மத்தியில் உற்சாகமூட்டினார்.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.