ஆகஸ்ட் 29ம் தேதி நாகை மாவட்டத்தில், புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா துவங்க உள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் தசரதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கியமாதா பேராலய ஆண்டு திருவிழா வருகிற 29ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி வரை நடக்கிறது.
இதையொட்டி சென்னை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, மணப்பாறை, தஞ்சை, கும்பகோணம், பூண்டி மாதாகோவில், ஒரியூர், சிதம்பரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகை, நாகூர், காரைக்கால் ஆகிய இடங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதே போல் வேளாங்கண்ணியில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருவிழா நாட்களில் 24 மணி நேரமும் சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது. மேலும் அனைத்து ஊர்களின் பஸ் நிலையங்களிலும், வேளாங்கண்ணி பேருந்து நிலையத்திலும் பயணிகள் வசதிக்காக சேவை மையங்கள் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சேவை மையங்களில் சிறப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிய உள்ளனர். எனவே பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?